அந்த டாப் நடிகையின் '50 வினாடி'க்கான சம்பளத்தை பார்த்து, மிரளும் திரையுலகம்.!
விதவை, விவாகரத்து பெற்ற பெண்கள் டார்கெட்; 49 பெண்களை ஏமாற்றிய கேடி இளைஞன் கைது.!
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஜாஜபுர் மாவட்டத்தில் வசித்து வருபவர் சத்யஜித் சாமேல் (வயது 34). இவர் திருமணத்திற்கு வரன்தேடும் இணையத்தில், விவாகரத்து பெற்று, கணவரை இழந்து இரண்டாவது திருமணத்திற்கு பதிவு செய்து வைத்துள்ள பெண்களை குறிவைத்து நூதன வலை வீசி இருக்கிறார்.
பணம், நகை பெற்று மோசடி
அதாவது, இரண்டாவது திருமணத்திற்கு பதிவு செய்துள்ள பெண்களுக்கு தொடர்பு கொண்டு ஆசையாக பேசும் சத்யஜித், தனது வலையில் சிக்கும் பெண்களிடம் திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பணம் மற்றும் நகைகளை பெற்று ஏமாற்றி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோவில் சுற்றுச்சுவர் இடிந்து 9 பேர் பலியான விவகாரம்; பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்.. நிதிஉதவி அறிவிப்பு.!
49 பெண்களை ஏமாற்றியது அம்பலம்
அதேபோல, 5 க்கும் மேற்பட்ட பெண்களை இவர் அடுத்தடுத்து திருமணம் செய்தும் இருக்கிறார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், கயவன் மொத்தமாக 49 பெண்களை ஏமாற்றியது உறுதியானது. இதுகுறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க: கோவில் வளாகத்தின் சுவர் இடிந்து விழுந்து சோகம்; 9 பேர் பரிதாப பலி.!