பாஜகவின் வெற்றியால் நடுங்கிய தமிழகத்திற்கு, பாஜக அமைச்சர் கூறிய ஆறுதல் வார்த்தைகள்!

பாஜகவின் வெற்றியால் நடுங்கிய தமிழகத்திற்கு, பாஜக அமைச்சர் கூறிய ஆறுதல் வார்த்தைகள்!


Nitin kadkari told about link krishna nad godavari

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி 354 இடங்களில் அமோக வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. பாஜக மட்டும் தனித்து 303 தொகுதிகளில் வென்றுள்ளது. 

வடமாநிலங்களில் ஆதிக்கம் செலுத்திய பாஜகவால் தமிழகம் மற்றும் கேரளாவில் ஒரு தொகுதியில் கூட வெல்லமுடியவில்லை. தமிழகத்தில் தேனி தொகுதியில் மட்டும் பாஜக கூட்டணியில் இருந்த அதிமுக வென்றது. 

Nitin kadkari

இந்தியா முழுவதும் தாமரை மலர்ந்தாலும் தமிழகத்தில் வேறூன்றவே விடக்கூடாது என திமுக கூட்டணி கட்சிகள் மட்டுமின்றி பெரும்பாலான தமிழக மக்களும் பாஜாகவிற்கு எதிராக வாக்களித்தனர். 

பாஜக ஒரு மதவாத கட்சி என்றும் பாஜக தமிழகத்தில் காலூன்றினால் தமிழகத்தின் அமைதி சீர்குலைந்துவிடும் என திராவிட கட்சிகளால் தமிழர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாஜகவால் ஒரு இடத்தை கூட பிடிக்கமுடியவில்லை. 

Nitin kadkari

கடந்த 2014 தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வென்ற பொன்.ராதாகிருஷ்ணன் கூட இந்த முறை வெற்றிபெறவில்லை. இதனால் பாஜகவிற்கு தமிழக மக்கள் மீது வெறுப்பு உண்டாகும் என்றும் பாஜக அரசு தமிழர்களுக்கு எதுவும் செய்யமாட்டார்கள் என்ற கருத்தும் தமிழ மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் நெடுஞ்சாலை துறை அமைச்சருமான நிதின் கட்கரி, பாஜகவின் வெற்றிக்கு பின்பு அளித்த முதல் பேட்டியிலேயே, "கோதாவரி மற்றும் கிருஷ்ணா நதிகளை இணைத்து தமிழக மக்களின் தண்ணீர் பற்றாக்குறையை போக்குவதே எனது முதல் பணி" என தெரிவித்துள்ளார்.