இந்தியா

இன்று சூரியன் தாமதமாக உதிக்க இதுதான் காரணமா.! இணையத்தையே தெறிக்கவிடும் நித்யானந்தாவின் வீடியோ!!

Summary:

nithyananda speech video viral

நித்யானந்தா என்றாலே சர்ச்சைகளுக்கு பஞ்சமிருக்காது. அவர் என்ன கூறினாலும் அது வைரலாகி பெரும் விமர்சனத்தை பெற்று வருகிறது. மேலும் நித்யானந்தா தியான பீடத்தின் நிறுவனரான இவருக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனர். மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பு நித்யானந்தா நடிகை ரஞ்சிதாவுடன் ஒன்றாக இருக்கும் வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை என சமாளித்தார்.

சுவாமி நித்யானந்தா பெங்களூர் அருகே பிடதியில் உள்ள ஆசிரமத்தில் பக்தர்களோடு தினமும் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இவ்வாறு சமீபத்தில் அவர் பக்தர்கள் மத்தியில் பேசிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளத்தில் கலக்கி வருகிறது.

nithyananda க்கான பட முடிவு

அந்த வீடியோவில் நித்யானந்தா சூரிய உதயத்தில் இருந்துதான் நமது நாள் தொடங்குகிறது. இன்று காலை நான் தியானத்தை முடிக்க சிறிது தாமதம் ஆகிவிட்டது. அதனால் நான் தியானம் முடிக்கும்வரை  சூரியனை உதிக்ககூடாது என கட்டளையிட்டேன். அதனால் சூரியன் 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது.

பிடதியில் சூரியன் உதிக்கும் நேரத்தை நீங்கள் கூகுளில் தேடிப் பார்த்தால் உங்களுக்கே தெரியும். எப்பொழுதும் சூரியன் உதிக்கும் நேரத்தை விட 40 நிமிடங்கள் தாமதமாக உதித்திருக்கும். இதற்கு எனது உத்தரவுதான் காரணம் என கூறியுள்ளார். 

 இதனை கேட்டு பக்தர்கள் அனைவரும் கைதட்டி ஆரவாரம் அசெய்துள்ளனர் . இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில் இதற்கு பலரும் விமர்சனங்கள் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement