13 மாநிலங்களில் அதிரடி சோதனை : 106 பேர் பரபரப்பு கைது; அதிரடி காட்டிய என்.ஐ.ஏ.!

13 மாநிலங்களில் அதிரடி சோதனை : 106 பேர் பரபரப்பு கைது; அதிரடி காட்டிய என்.ஐ.ஏ.!


NIA Arrest 106 Peoples Whom Popular Brand of India

இந்தியாவில் உள்ள தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலுங்கானா, ஆந்திரா, மத்திய பிரதேசம், பீகார், மகாராஷ்டிரா, உத்திர பிரதேசம், கர்நாடகா, டெல்லி, அசாம், இராஜஸ்தான் மாநிலத்தில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா அமைப்பை சேர்ந்த 106 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். 

India

இதில், கேரளாவில் 22 பேர் அதிகபட்சமாக கைது செய்யப்பட்டனர். கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தில் 20 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தில் 10 பேரும், உத்திர பிரதேசத்தில் 8 பேரும், ஆந்திராவில் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் டெல்லிக்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடத்தப்படவுள்ளனர்.