இந்தியா

திருமணமான 5வது நாளிலேயே, பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை! கொரோனோவால் நேர்ந்த பெருந்துயரம்!

Summary:

New married groom dead for corono affect

கர்நாடகா மாநிலம், உத்தரகன்னடா மாவட்டம் பட்கல் டவுன் பகுதியைச் சேர்ந்த 26 வயது வாலிபர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நிச்சயக்கப்பட்ட பெண்ணுடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து திருமணம் முடிந்த மறுநாளே மணமகனின் உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டு, உடனே  அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

அங்கு அவருக்கு சளி மற்றும் ரத்தம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் இளைஞருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அதனை தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில், புதுமாப்பிள்ளை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருமணமான 5-வது நாளில் புதுமாப்பிள்ளை கொரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அவரது குடும்பத்தை சேர்ந்த இரு முதியவர்களுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 1 வயது குழந்தை,  8 சிறுவர்-சிறுமிகள் உள்பட மொத்தம் 70 பேர் தனிமைப்படுத்தபட்டு  கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement