இந்தியா லைப் ஸ்டைல்

புது ஜோடிகளை இணைக்க இந்த மாதிரியான முயற்சியில் இறங்கியுள்ள முன்னணி நடிகை!!

Summary:

new jodi app bable brianka shopra

ஆண்களும் பெண்களும் தங்களுக்கு விருப்பமான ஜோடிகளை தேர்வு செய்ய 'பம்பிள்' என்ற டேட்டிங் ஆப் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது. இந்த ஆப்பில் இந்திய சினிமாவின் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா முதலீடு செய்துள்ளார்.

இந்தியாவில் தங்களுக்கு இணையான விருப்பமான ஜோடிகளை தேர்வு செய்ய பல அமைப்புகள், விளம்பர நிறுவனங்கள், பல டேட்டிங் ஆப்கள் இருந்தாலும் அவற்றில் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இல்லை என்று பரவலான விமர்சனம் எழுந்து வருகிறது.

இந்த நிலையில் பம்பிள் ஆப் பெண்களுக்கு பாதுகாப்பாகவும் பாலியல் ரீதியாக எந்த தொந்தரவும் இல்லாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு வேலை வேண்டும், நட்பு வேண்டும், காதல் வேண்டும் அவர்களின் வாழ்வின் பாதுகாப்பிற்காகவும் முன்னேற்றத்திற்காகவும் இதில் முதலீடு செய்கிறேன் என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார். மேலும் இந்த நிறுவனத்தில் பங்குதாரராகவும் நல்ல ஆலோசகராகவும் செயல்படுவார் என்று பம்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.


Advertisement