இமயமலையில் இமாலய சதம் காணும் இந்தியா; பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.

இமயமலையில் இமாலய சதம் காணும் இந்தியா; பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்.



new airport in sikkim manilam

இந்தியாவின் 100 வது விமான நிலையம்  சிக்கிம் மாநிலத்தில் அமைய உள்ளது. அங்கு அமையும் முதலாவது விமான நிலையம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாநிலங்களுள் ஒன்று சிக்கிம் மாநிலம்.  இந்தியாவின் கடைநிலையில் இமயமலை பகுதியில் அமைந்துள்ள இம்மாநில பொருளாதார நிலை மேம்படுவதற்கான எந்த வசதிகளும் இல்லாத நிலையில் அங்கு விமான நிலையம் அமைய உள்ளது அம்மாநில மக்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

1st airport sikkim

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் சிக்கிம் மாநிலத்தில் உள்ள பாக் யாங் என்ற கிராமத்தில் விமான நிலையத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.  தற்போதுதான் அதன் பணிகள் நிறைவடைந்து இன்று பாரத பிரதமர் அவர்களால் திறந்து வைக்கப்படுகிறது.  இதனால் இந்தியாவின் கடைநிலையில் உள்ள  சிறிய மாநிலமான சிக்கிம் மாநிலத்திற்கான தொடர்பு  மேம்படுத்தப்பட்டு,  அதன் இயற்கை வளங்கள் சுற்றுலா தளங்களாக  மேம்பட வழிவகை உண்டாகும். 

ஹெலிகாப்டர் மூலம் சிக்கிம் மாநிலம் காங்டாங்க் சென்றடைந்த  பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில ஆளுநர் கங்கா பிரசாத் , மாநில முதல்வர் பவன் சாம்லிங் ஆகியோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  விமான நிலையம் திறந்து வைத்த பின் அங்கு உள்ள பள்ளி ஒன்றில் பொதுமக்களிடம்  உரையாற்றுவதாக இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.

நேற்று தனது டுவிட்டரில் பதிவிட்டிருந்த மோடி, பாக்யாங்கில் திறந்து வைக்கப்படும் விமான நிலையம் மூலம் பிற மாநிலங்கள் உடனான தொடர்பு ஏற்படும். சிக்கிம் மாநில மக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். 



 

பாக்யாங் விமான நிலையம் 201 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. பாக்யாங் கிராமத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் உயரத்தில்  உள்ள மலைப் பகுதியில் அமைந்துள்ளது.  அதாவது கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இன்று திறந்து வைக்கப்படும் விமான நிலையம் நாட்டின் நூறாவது விமான நிலையம் ஆகும்.  இது மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள பக்பரோடாவில் இருந்து 124  கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.