கோவிலை அபகரிக்க முயற்சிக்கும் நடிகர் வடிவேலு? ஒன்றுகூடிய கிராமம்.. பரபரப்பு புகார்.!
அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு அங்கீகாரம் வழங்கியது தேர்தல் ஆணையம்; மஹாராஷ்டிரா அரசியலில் அதிரடி.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா - பாஜக தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
முன்னதாக தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ் தலைமையிலான சிவசேனா உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது.
அப்போது, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் எம்.எல்.ஏ பொறுப்பில் இருந்த அஜித் பவார், பாஜகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தார்.
இந்நிலையில், அஜித் பவார் - சரத் பவார் இடையே கட்சியை உரிமை கொண்டாடுவது தொடர்பாக பிரச்சனை எழுந்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியில் பிளவு உண்டானது.
கட்சியை உரிமை கொண்டாடி இருதரப்பிலும் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க, விசாரணை மேற்கொண்ட தேர்தல் ஆணையம் அஜித் பவரின் தலைமையிலான கட்சியை தேசியவாத காங்கிரஸ் கட்சியாக அங்கீகரித்து இருக்கிறது.
அவருக்கே அக்கட்சியின் கடைக்கார சின்னத்தையும் வழங்கி இருக்கிறது. இது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் சலசலப்பை உண்டாக்கியுள்ளது.