பெங்களூரு கலவரம்! அனுமன் கோயிலுக்கு பாதுகாப்பாக நின்ற இஸ்லாமியர்கள்! வைரல் வீடியோ!

பெங்களூரு கலவரம்! அனுமன் கோயிலுக்கு பாதுகாப்பாக நின்ற இஸ்லாமியர்கள்! வைரல் வீடியோ!



muslims youngsters guard at hanuman temple

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் மத வெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் பல போலீஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து பெங்களூரு மாநகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது. 

இதனையடுத்து அங்குள்ள இந்து கோயில்களுக்கு போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில், ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோயிலை சுற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனிதச் சங்கிலி முறையில் கைக்கோர்த்து கோவிலுக்கு பாதுகாப்பாக நின்றனர்.

உரிய நேரத்தில் கோயிலுக்கு பாதுகாப்பு அளித்ததால் அங்கு நடைபெறவிருந்த வன்முறை தடுக்கப்பட்டது, கலவர நேரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து கோயிலுக்கு காவலாக நின்ற வீடியோக்கள் தற்போது வைரலாகி பாராட்டுகளை பெற்று வருகின்றன.