குறுக்கே வந்தவரை ஓங்கி அடித்த பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்.?
விநாயகருக்கே இந்த நிலைமையா? முஸ்லீம் நாட்டில் விநாயகர் சிலையை உடைத்துத்தள்ளிய இஸ்லாமிய பெண்.! வைரல் வீடியோ காட்சிகள்.!
விநாயகருக்கே இந்த நிலைமையா? முஸ்லீம் நாட்டில் விநாயகர் சிலையை உடைத்துத்தள்ளிய இஸ்லாமிய பெண்.! வைரல் வீடியோ காட்சிகள்.!

வெளிநாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர் கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை கீழே தள்ளி உடைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் மிகவும் பிரபலமாக கொண்டாடப்படும் விழாக்களில் ஒன்று விநாயகர் சதுர்த்தி பண்டிகை. இந்த மாதம் 22 ஆம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் மற்ற பகுதிகளில் வாழும் இந்து மதத்தை சேர்ந்தவர்களும் விநாயகர் சதுர்த்தி திருவிழாவை கொண்டாட தயாராகிவருகின்றனர்.
இந்நிலையில் பக்ரைன் நாட்டின் ஜீப்பர் நகரில் அமைந்துள்ள கடை ஒன்றில் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தநிலையில், கடைக்குள் வந்த இஸ்லாமிய பெண் ஒருவர் இந்து முஸ்லீம் நாடு, இங்கு ஏன் விநாயகர் சிலையை வைத்துளீர்கள் என அதட்டி கூறிக்கொண்டே கடையில் இருந்த விநாயகர் சிலைகள் ஒவொன்றாக கீழே தள்ளி உடைக்கிறார்.
இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருந்தநிலையில் தற்போது அந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும் பலரும் அந்த பெண்ணின் செயலுக்கு தங்கள் கண்டனத்தை தெரிவித்துவருகின்றனர். இதனிடையே குறிப்பிட்ட பெண் மீது அந்நாட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.