இந்தியா

கடைசியாக ஒருதடவையாவது பார்க்கவேண்டும்! முதல்வருக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்த முருகன்!

Summary:

Murugan request to saw his father funeral

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி, அவரது கணவர் முருகன் உட்பட  7 பேர் குற்றம் சாட்டப்பட்டு 28 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள்தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில்  முருகனின் தந்தை வெற்றிவேல் என்பவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக  யாழ்பாணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்நிலையில், முருகன் தமிழக முதல்வருக்கு, தனது தந்தையுடன் கடைசியாக ஒருமுறை வீடியோ கால் பேசவேண்டும். அதற்கு  அனுமதியளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்து அவசர மனு ஒன்றை நேற்று முன்தினம் அனுப்பியிருந்தார். ஆனால் அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அதனை தொடர்ந்து இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி முருகனின் தந்தை காலமானார். இந்த நிலையில் தனது தந்தையின் உடலை கடைசியாக ஒரு முறையாவது பார்க்கவேண்டும். வீடியோகால் அனுமதி வழங்க வேண்டும் என்று முருகனும் இலங்கையில் உள்ள அவரது குடும்பத்தாரும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

 


Advertisement