இந்தியா

பெற்ற மகளை கொடூரமாக கழுத்தறுத்து கொன்று விட்டு மனைவியின் முன் அழுது நாடகமாடிய தந்தை! கடைசியில் வெளியான உண்மை!

Summary:

Murder

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முத்தா கொமுராய. இவருக்கு ராதிகா என்ற 11 வகுப்பு படிக்கும் மகள் இருந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் ராதிகா கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் வீட்டில் சடலமாக கிடந்துள்ளார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய ராதிகாவின் பெற்றோர் மகள் கிடந்ததை பார்த்து கதறி அழுதுள்ளனர்.

அதனை அடுத்து அப்பகுதி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். கிட்டத்தட்ட 75 காவல் துறையினர் விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர். கடைசியில் அந்த கொலைக்கு காரணம் அவரது தந்தை தான் என கண்டறித்துள்ளனர்.

அதனை அடுத்து போலீசார் கொமுராயவிடம் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை செய்துள்ளனர். அதில் ராதிகா நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரின் மருத்துவத்திற்கு 6 லட்சம் ரூபாய் செலவு ஆகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் கொமுராயவால் அவ்வளவு தொகை ஏற்ப்பாடு செய்ய முடியவில்லை. அதனால் மனைவி காலையில் கொலைக்கு சென்ற பிறகு மகளின் முகத்தை தலையணையால் அமுக்கி கொன்று விட்டு பின் கத்தியால் கழுத்தை அறுத்துள்ளார்.

மேலும் வீட்டில் உள்ள நகையை எடுத்து வைத்து கொண்டு திருடன் வந்து நகையை எடுத்து விட்டு மகளை கொன்று விட்டதாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணம் எழும் என்று கூறியுள்ளார். இந்நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


Advertisement