கேரளாவில் அதிர்ச்சி: வேகமாக பரவும் 'MUMPS' நோய்.! ஒரே நாளில் 190 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு.!

கேரளாவில் அதிர்ச்சி: வேகமாக பரவும் 'MUMPS' நோய்.! ஒரே நாளில் 190 பேருக்கு தொற்று கண்டுபிடிப்பு.!



mumps-spreading-in-kerala-190-people-infected-in-1-day

கேரளாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 190 பேருக்கு மம்ப்ஸ் என்றழைக்கப்படும்  பொன்னுக்கு வீங்கி நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு மாதத்தில் மட்டும் கேரளாவில் 2,505 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த இரண்டு மாதங்களில் 11,467 பேர் இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக கேரள சுகாதார துறையின் தரவுகள் தெரிவிக்கிறது.

இந்த நோய் தொற்று கேரளாவில் வேகமாக பரவி வருவதை உறுதி செய்துள்ள மத்திய சுகாதாரத்துறை இது தொடர்பாக மாநிலத்தில் உள்ள தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Indiaபாதிக்கப்பட்ட நபரின் மேல் சுவாசக் குழாயில் இருந்து நீர்த்துளிகள் மூலம் நேரடி தொடர்பு அல்லது காற்று வழியாக இந்த நோய் தொற்றுக் கிருமிகள் பரவுகின்றன. பொன்னுக்கு வீங்கி பாராமிக்ஸோ வைரஸால் ஏற்படுகிறது. இந்த நோய் தொற்றுக்கான அறிகுறி இரண்டு முதல் நான்கு வாரங்களில் வெளிப்படும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உமிழ்நீர் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் இந்த நோயின் முக்கியமான அறிகுறி ஆகும். இந்த நோய் சிறு குழந்தைகளை அதிகமாக பாதிக்கிறது. மேலும் இளம் பருவத்தினர் மற்றும் வயதானவர்களும் பாதிக்கப்படலாம்.

Indiaபெரும்பாலான நோய் தொற்றுகள் மலப்புறம் மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தின் வடபகுதிகளில் பதிவாகி இருக்கிறது.அம்மை மற்றும் ரூபெல்லா ஆகியவற்றுடன் இந்த நோய் தொற்றுக்கான தடுப்பூசி இருந்தாலும் அது அரசாங்கத்தின் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லை. எனினும் பெற்றோர்கள் தனியார் மையங்களின் மூலம் தங்களது குழந்தைகளுக்கு MMR தடுப்பூசிகளை செலுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.