7 வயதில் மாயமான சிறுமி 16 வயதில் மீட்பு.. பெற்றோரின் 9 ஆண்டு கண்ணீரை துடைத்த நெகிழ்ச்சி சம்பவம்.!

7 வயதில் மாயமான சிறுமி 16 வயதில் மீட்பு.. பெற்றோரின் 9 ஆண்டு கண்ணீரை துடைத்த நெகிழ்ச்சி சம்பவம்.!


Mumbai Missing Girl Rescued after 9 Years She now 16 Age Girl

கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னதாக கடத்தப்பட்ட சிறுமி மீண்டும் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் வசித்து வந்த 7 வயது சிறுமி, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி மாமனார். இந்த விஷயம் தொடர்பாக சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், 9 ஆண்டுகளுக்கு முன்னர் மாயமான சிறுமி ஜுஹு பகுதியில் இருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் சிறுமி இருந்த வீட்டில் வசித்து வந்த ஹரி மற்றும் அவரின் மனைவி சோனி ஆகியோரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுமி கடத்தப்பட்டதும் கர்நாடகா அழைத்து செல்லப்பட்டுள்ளார். பின்னர், சில வருடங்கள் கழித்து மும்பை அழைத்து வரப்பட்டுள்ளார். சிறுமியை தம்பதி அடித்து துன்புறுத்தி வந்துள்ளனர். 

maharashtra

மேலும், இவர்கள் தனது பெற்றோர் இல்லை என்பதை ஒருகட்டத்தில் உணர்ந்த சிறுமி, தனது வீட்டில் வீட்டுவேலை செய்ய வந்த பிரமீளா என்ற பெண்மணியிடம் நடந்ததை கூறி காப்பாற்ற வலியுறுத்தியுள்ளார். இதன்பின்னரே காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, விசாரணைக்கு பின்னர் சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல் துறையினர், பிரமீளாவுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். 

7 வயதில் கடத்தப்பட்ட சிறுமி தனது 16 வயதில் மீண்டும் பெற்றோரை சேர்ந்தார். பிரிந்த மகளை கண்ட பெற்றோர், மகளை ஆரத்தழுவி ஆனந்தக்கண்ணீருடன் வரவேற்பு அளித்தனர். சிறுமியை கடத்திய குழந்தை இல்லாத தம்பதி கைது செய்யப்பட்டார்.