6 வயது மகனுடன் இரயில் முன்பாய்ந்து தந்தை தற்கொலை.. நூலிழையில் பிழைத்த மகன்.. பதைபதைக்கவைக்கும் வீடியோ.!Mumbai Kalyan Near Vithalwadi Railway Station Father Suicide Jump Train Son Narrow escape

இரயில் நிலையத்தில் 6 வயது மகனுடன் தந்தை தற்கொலைக்கு முயற்சிக்க, இரயிலில் அடிபட்டு தந்தை பரிதாபமாக பலியாகினார். மேலும், மகன் நூலிழையில் தப்பி உயிர்பிழைத்த சம்பவம் நடந்துள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டம், ஷாந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரமோத் அந்தலே. இவருக்கு 6 வயதுடைய ஸ்வராஜ் என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில், நேற்று பிரமோத் தனது மகன் ஸ்வராஜுடன், மும்பையில் உள்ள கல்யாண், விதளவாடி இரயில் நிலையத்திற்கு வந்துள்ளார். 

நேற்று மாலை 06:13 மணியளவில் இரயில் நிலைய நடைமேடையில் மகனுடன் நின்று கொண்டு இருந்த பிரமோத், அவ்வழியாக சென்ற மும்பை - பவுண்ட் டெக்கான் இரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த தற்கொலையில் பிரமோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட, அவரின் மகன் சிறு காயத்துடன் அதிஷ்டவசமாக உயிர்பிழைத்தார். 

Mumbai

தந்தையும் - மகனும் இரயில் முன் பாய்வதை அறியாத பிற இரயில் பயணிகள் நடைமேடையில் அமர்ந்துகொண்டு இருந்த நிலையில், சம்பவம் நடந்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின்னர், இரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரியவந்து, அவர்கள் சிறுவனை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். 

மேலும், ப்ரமோத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரமோத் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் வசித்து வந்த நிலையில், எதற்காக மகனுடன் தற்கொலைக்கு முயன்றார்? என விசாரணை நடந்து வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பான பதைபதைப்பு சி.சி.டி.வி கேமிரா காட்சிகளும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.