விமானத்திலேயே நாங்க நின்னுக்கிட்டுதான் போவோம் - பயணிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை.!Mumbai Flight Passenger Standing Ride 

 

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை விமான நிலையத்தில் இருந்து, நேற்று வாரணாசிக்கு இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட தயாரானது. 

இந்த விமானத்தில் இருக்கையில் அனைவரும் அமர்ந்துகொண்டு நிலையில், விமான குழுவினரும் பயணத்தை தொடங்கியுள்ளனர். அச்சமயம் ஒரு பயணிக்கு மட்டும் இருக்கை கிடைக்கவில்லை. 

இதையும் படிங்க: ஏசி பெட்டியில் அத்துமீறி நுழைந்து இருவர் கும்பலால் பெண் பலாத்காரம்.!

பயணியை இறக்கிவிட்டு பறந்த விமானம்

அதற்குள் விமானம் ஓடுபாதைக்கு புறப்பட சென்ற நிலையில், விமானிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் பயணிகளை ஏற்றும் முனையத்திற்கு வந்த விமானம், ஒரு பயணியை இறக்கிவிட்டு பின் பறந்து சென்றது. 

முதற்கட்ட விசாரணையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூடுதலாக ஒரு பயணி ஏற்றப்பட்டதாகவும் இண்டிகோ விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படிங்க: "நான் உயிரியல் ரீதியாக பிறக்கல., கடவுள்தான் என்னை பூமிக்கு அனுப்பினார்" - பிரதமர் மோடி பேச்சு.!