இந்தியா

சமைக்கும் போது இப்படியா நடக்கணும்?.. 2 பச்சிளம் பிஞ்சுகள், தாய்-தந்தைக்கு நேர்ந்த சோகம்.!

Summary:

சமைக்கும் போது இப்படியா நடக்கணும்?.. 2 பச்சிளம் பிஞ்சுகள், தாய்-தந்தைக்கு நேர்ந்த சோகம்.!

சமையல் சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில், ஒரே குடும்பத்தை சார்ந்த கைக்குழந்தை, 5 வயது குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். 

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை சென்ட்ரல் பகுதியை சார்ந்தவர் ஆனந்த பூரி. இவரது மனைவி வித்யா பூரி. இந்த தம்பதிக்கு விஷ்ணு பூரி என்ற 5 வயது மகனும், மங்கேஷ் பூரி என்ற 5 மாத கைகுழந்தையும் உள்ளனர். 

கடந்த செவ்வாய்கிழமை காலை உணவு சமைத்துக்கொண்டு இருக்கையில், சரியாக 7.11 மணியளவில், திடீரென சமையல் சிலிண்டர் வெடித்து சிதறியுள்ளது. இந்த விபத்தில், வீட்டில் இருந்த கணவன் - மனைவி, 2 குழந்தைகள் என நான்கு பேர் காயம் அடைந்துள்ளனர்.  

இந்த விபத்து குறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர், இடிபாடுகளை அகற்றி நால்வரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் குடும்ப தலைவரும், 5 மாத பச்சிளம் குழந்தையும் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிற 2 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், சமையல் சிலிண்டரை உபயோகம் செய்யும் போது, மக்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். விசரணையில், சமையல் சமைக்கும் போது வீட்டின் அறை, கதவுகள் மூடப்பட்டு இருந்த நிலையில், கியாஸ் லீக் ஆனது தெரியாமல் சமையல் செய்ய முயற்சித்தால் சிலிண்டர் வெடித்து இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


Advertisement