அம்பானியின் ஒரே மகளுக்கு திருமணம்!. அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?

அம்பானியின் ஒரே மகளுக்கு திருமணம்!. அந்த அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா?


mukesh ambani daughter marriage fixed

ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவா் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானியின் மகள் ஈஷா அம்பானியும், தொழிலதிபா் ஆனந்த் பிரமலும் நீண்ட கால நண்பா்களாக இருந்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் இருவரும் தங்களது காதலை பறிமாறிக்கொண்டனா். இவா்களது காதலுக்கு இரு குடும்பத்திலும் சம்மதம் தெரிவித்ததுடன், இவா்களது நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

இந்நிலையில் முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தங்களது குடும்ப உறுப்பினா்களுடன் திங்கள் கிழமை மாலை மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகா் கோவிலுக்கு வந்து வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து செவ்வாய்க் கிழமை இவர்களது திருமண தேதி அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இவா்களது திருமணம் வருகிற டிசம்பா் 12ம் திகதி மும்பையில் உள்ள அம்பானியின் இல்லத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.