இந்தியா

பிள்ளைகளை பிரிந்து 26 ஆண்டுகள் இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட தாய்.! தற்போது நிகழ்ந்த நெகிழ்ச்சி சம்பவம்!

Summary:

Mothers love

தெலங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டம் இம்முல் நர்வா கிராமத்தை சேர்ந்தவர் சின்னஞ்சையா (64) - நீலம்மாள் (60) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகளும் மூன்றும் மகன்களும் உள்ளனர். ஆனால் நீலம்மாள் 26 ஆண்டுகளுக்கு முன்பே மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த காரணத்தால் அவரை வீட்டிலேயே வைத்து பாதுகாத்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஒரு நாள் தான் என்ன செய்கிறோம் என்பது கூட தெரியாமல் பிள்ளைகளுக்கு சாப்பாட்டில் எலி மருந்தை சேர்த்து சாப்பிட கொடுத்துள்ளார். அதன் பிறகு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

பிள்ளைகள் அனைவரும் வாந்தி, மயக்கமாகி உள்ளனர். உடனே அவர்களை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதற்கிடையில் மனநலம் குன்றிய தாய் நீலம்மாள் சாலையோரம் கிடந்துள்ளார்.

அவரை பார்த்த காப்பக நபர்கள் அவரை அழைத்து சென்று சிகிச்சை அளித்து பராமரிப்பு வந்துள்ளனர். தற்போது நீலம்மாள் கூறிய தகவலை வைத்து போலீசார் அவரின் பிள்ளைகளை கண்டு பிடித்துள்ளனர்.

26 ஆண்டுகளுக்கு பிறகு, தாய் நீலம்மாளை சந்தித்த பிள்ளைகள் மன மகிழ்ச்சியோடு தாயை அரவணைத்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்துள்ளது


Advertisement