
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள சித்தஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வருபவர
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அருகேயுள்ள சித்தஞ்சி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் தயாளன். இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வெண்ணிலா. இவர்களுக்கு 5 வயதில் கீர்த்தி, 3 வயதில் ஹரிதா என இருமகள்கள் உள்ளனர். தயாளன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர். மேலும் அவர் மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு மது போதையில் வந்த தயாளன் மனைவியுடன் பிரச்சினை செய்துள்ளார். இதில் மனவேதனையடைந்த வெண்ணிலா மகள் ஹரிதாவை தூக்கிச்சென்று, விளையாட கட்டப்பட்டிருந்த சேலையில் தூக்கில் தொங்கவிட்டுள்ளார். இதில் குழந்தை துடிதுடித்து உயிரிழந்தது. அதனைத் தொடர்ந்து வெண்ணிலாவும் அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதிகாலை தாயும் மகளும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து அவர்களது குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Advertisement
Advertisement