இந்தியா உலகம் லைப் ஸ்டைல்

மனிதர்களை மிஞ்சிய யானையின் தாய் பாசம்!! குட்டிக்கு கொசு கடிக்காமல் இருக்க விசிறி விடும் யானை.. வைரல் வீடியோ..

Summary:

தனது குட்டிக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்காக தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு விசிறிவிடும்

தனது குட்டிக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்காக தாய் யானை ஒன்று தனது குட்டிக்கு விசிறிவிடும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகிவருகிறது.

சீனாவின் Shijie என்ற வனப்பகுதியில் இந்த காட்சி ட்ரோன் கேமிரா மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது. Xishuangbanna என்ற வனப்பகுதியில் இருந்து சுமார் 500 கிலோ மீட்டர் தூரம் நடைபயணம் செய்துவந்த இந்த யானை கூட்டம் Shijie என்ற பகுதியில் ஒரு வாரத்திற்கு மேலாக தங்கி ஓய்வெடுத்துவருகிறது.

இந்நிலையில் மொத்த யானை கூட்டமும் உறங்கிக்கொண்டிருக்கும்போது, தனது குட்டிக்கு கொசு கடிக்காமல் இருப்பதற்காக, தாய் யானை தனது உடல் முழுவதையும் கொண்டு தனது குட்டியை மறைத்துக்கொள்வதும், பின்னர் தனது தும்பிக்கையால் மரக்குச்சியை பிடித்துக்கொண்டு விசிறி விடும் காட்சிகள் சீனாவில் டிரோன் மூலம் படம்பிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், மரக்குச்சியை கீழே போட்டுவிட்டு, தனது குட்டியின் உடலில் தும்பிக்கையால் தடவிக்கொடுத்து அதை தாய் யானை தூங்க வைக்கும் காட்சியும் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது.


Advertisement