வேட்டையன் ரூ.1000 கோடி வசூல்: மண்சோறு சாப்பிட்டு ரஜினி ரசிகர்கள் வழிபாடு.!
காதலனுடன் கம்பி நீட்டிய மகள்..தாயின் செயலால் கதிகலங்கிய மாவட்ட கலெக்டர் அலுவலகம்.!
கல்லூரி மாணவி காதலனுடன் ஓடியதால் மாணவியை மீட்டு தருமாறு, அவரது தாய் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள ஹாசன் மாவட்டம் சென்னராயப்பட்டணா மாரேனஹள்ளி கிராமத்தில் 18 வயதுடைய கல்லூரி படிக்கும் மாணவி வசித்து வருகிறார். இவர் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னதாக பவன் என்ற வாலிபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு சென்றுள்ளார்.
இது குறித்து அறிந்த தாய் தனது மகள் மீண்டும் தன்னிடம் வருவார் என்று எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அவர் வராததால் சமீபத்தில் சென்னராயப்பட்டணா நகர காவல் துறையினரிடம் புகாரளித்துள்ளார்.
ஆனால், காவல்துறையினர் இந்த புகாரின் பேரில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால், மனமுடைந்த தாய் நேற்று ஹாசன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு விஷ பாட்டிலுடன் சென்றுள்ளார்.
அப்போது தனது மகளை கண்டுபிடித்து தந்தே ஆக வேண்டும் என்று கூறிய நிலையில், உடனடியாக விஷத்தை குடிக்க முயற்சித்துள்ளார். இதனை கண்ட கலெக்டர் அலுவலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து விசாரித்துள்ளனர்.அப்போது விசாரணையில், "நான் ஆஷா ஊழியராக வேலை பார்த்து வருகிறேன். இந்த வேலை பார்த்து தான் எனது மகளை நான் படிக்க வைத்தேன். ஆனால், எனது மகளை பவன் என்ற ஒருவன் காதல் எனும் பெயரில் கடத்தி சென்றுள்ளான்.
இதனால் உடனடியாக எனது மகளை மீட்டு தரவேண்டும், இல்லையென்றால் நான் தற்கொலை செய்வது தவிர எனக்கு வேறு வழி இல்லை" என்று கூறியுள்ளார்.
பின் இது குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாகவும், உங்கள் மகளை மீட்டு தருவதாகவும் உறுதியளித்தார். இதன் பின்னர் தாய் ஆஷா அங்கிருந்து மீண்டும் தனது வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.