முதியவரை அடித்து கொன்ற குரங்குகள்! குரங்குகள் மீது FIR வழக்கு!

முதியவரை அடித்து கொன்ற குரங்குகள்! குரங்குகள் மீது FIR வழக்கு!


Monkeys killed 72 years old man in india

 72 வயது முதியவர் ஒருவரை குரங்குகள் கல்லால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் பாக்பத் என்ற கிராமத்தில் வசித்துவரும் தரம்பால் சிங்க். 72 வயதாகும் இவர் அங்குள்ள காட்டுப்பகுதிக்கு விறகு பொறுக்க சென்றுள்ளார். விறகு பொறுக்கிக்கொண்டிருக்கும்போது அந்த பகுதியில் இருந்த குரங்குகள் தரம்பால் சிங்கை பார்த்ததும் சுவர் மீதிருந்த கற்களை எடுத்து அவர் மீது வீச தொடகியுள்ளன. ஒருகட்டத்தில் குரங்குகள் தொடர்ந்து தாக்குதலில் ஈட்பட்டதால் தரம்பால் சிங்க் மயக்கமடைந்துள்ளார்.

Monkeys

அவரது உறவினர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தரம்பால் சிங் மரணமடைந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் தரம்பால் சிங் மரணத்திற்கு காரணமான குரங்குகள் மீது வழக்கு போட வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அவர்களது புகாரை வாங்க காவல் துறையினர் மறுத்து விட்டனர். விலங்குகள் மீதெல்லாம் வழக்கு போடமுடியாது என்ற அவர்கள் தெரிவித்துள்ளார். ஆனால் அதை ஏற்க மறுத்த குடும்பத்தினர் நீங்கள் FIR போடவில்லையென்றால் உங்கள் உயர் அதிகாரிகளுக்கு கடிதம் எழுதுவோம் என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.