புஷ்பா 2 எப்படி? புளூ சட்டை மாறன் விமர்சனம் இதோ.. பாராட்டு., பன்ச்.. என்டில் ட்விஸ்ட்.!
அட.. இந்த குரங்கு செய்யும் சேட்டையை பார்த்தீங்களா! தொங்கும் பாலமே ஆடுதே! வைரலாகும் வீடியோ!!
சமூக வலைதளங்களில் தற்போதெல்லாம் பல வகையான விலங்குகள் மற்றும் பறவைகளின் வீடியோக்கள் வெளியாகி பெருமளவில் வைரலாகி வருகிறது. மெய் மறந்து ரசிக்கும் வகையிலும், அதே நேரத்தில் ஆச்சரியமூட்டும் வகையிலும் இருக்கும் விலங்குகள் மற்றும் பறவைகளின் க்யூட்டான சேட்டைகள் மற்றும் திறமைமிக்க வீடியோக்கள் பார்ப்போரை சிரிக்க வைத்து கவர்கிறது.
இந்நிலையில் குரங்கு ஒன்று தாவி தாவி சேட்டை செய்து கொண்டே தொங்கு பாலத்தை கடந்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே குரங்குகள் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அவை செய்யும் சேட்டைகள்தான். சேட்டை செய்யும் பிள்ளைகளை திட்டும்போது கூட குரங்குபோல செய்கிறாய் என்றே கூறுவார்கள். அவ்வாறு பல நேரங்களில் ரசிக்கும் வகையில் குரங்குகள் செய்யும் சேட்டைகள் இணையத்தில் வைரலாகும்.
On a journey.. 😅 pic.twitter.com/Y9883O9l2t
— Buitengebieden (@buitengebieden_) December 14, 2021
அந்த வகையில் தற்போது வைரலாகும் வீடியோவில், குரங்கு ஒன்று தொங்கு பாலத்தை கடக்கும் போது சாதாரணமாக நடந்து செல்லாமல் தாவி தாவி சேட்டைகள் செய்த வண்ணமே செல்கிறது. இதனால் தொங்கும் பாலமே ஆடுகிறது. இந்த வீடியோ வைரலாகி ரசிக்க வைத்துள்ளது. மேலும் லைக்ஸ்களும் குவிகிறது.