இந்தியா

வாகன பதிவில் புது மாற்றம்! இனி இப்படி செஞ்சா உங்க வாகனத்தை பதிவு செய்ய முடியாது!

Summary:

Modified vehicle is not eligible for registration rules supreme court

கார், பைக் போன்ற மோட்டார் வாகனங்கள் வாங்கவேண்டும் என்பது அனைவர்க்கும் மிகவும் பிடித்தமான விஷயங்களில் ஓன்று. இன்னும் சிலருக்கு தாங்கள் வாங்கிய வாகனத்தை, தங்களுக்கு பிடித்த வகையில் மாற்றி அமைப்பது மிகவும் பிடித்திருக்கும். அதுபோன்று மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் இனி பதிவு செய்ய முடியாது என நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

கார் உற்பத்தி நிறுவனம் தயார் செய்த அதே நிலையில்தான் இனி வாகனங்களை பதிவுக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் வினீத் சரண் அமர்வு தீர்ப்பு வழகியுள்ளது.

உங்கள் வாகனத்தில் சிறு சிறு மாற்றங்களை நீங்கள் செய்துகொள்ளலாம். அதாவது வாகனத்தின் வண்ணத்தை நீங்கள் மாற்றிகொள்ளலலாம். ஆனால் வாகனத்தின் என்ஜினை மாற்றுவது, வாகனத்தின் அமைப்பினை மாற்றம் செய்வது போன்ற செயல்பாடுகள் இனி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்றும், அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட வாகனங்கள் இனி பதிவு செய்ய அனுமதி இல்லை என்றும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


Advertisement