அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.! கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிடவில்லை.! மோடி ஓப்பன் டாக்.!

அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.! கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிடவில்லை.! மோடி ஓப்பன் டாக்.!



modi talk about congress

ராஜஸ்தான், தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், சத்தீஷ்கார் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை கடந்த 9-ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனையடுத்து சத்தீஷ்கரில் வரும் 7 மற்றும் 17 ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

இதனையடுத்து அனைத்துக்கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 90 தொகுதிகளை கொண்ட சத்தீஷ்கரில் முதல் கட்டமாக 20 தொகுதிகளுக்கும், 2-வது கட்டமாக 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தநிலையில், சத்தீஷ்கரில் துர்க் என்ற இடத்தில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், ஊழல் செய்து தனது கருவூலத்தை நிரப்பும் பணிக்கு மட்டும் காங்கிரஸ் முன்னுரிமை அளிக்கிறது. 

உங்களிடம் இருந்து கொள்ளையடிக்கும் எந்த வாய்ப்பையும் காங்கிரஸ் தவறவிடவில்லை. அவர்கள் மகாதேவ் என்ற பெயரை கூட விட்டுவைக்கவில்லை. மகாதேவ் சூதாட்டச் செயலி உரிமையாளர்களிடம் இருந்து முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு பல கோடி ரூபாய் கைமாறி இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சி அமைந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு பைசாவிற்கும் அவர்கள் கணக்கு சொல்லவேண்டும் என தெரிவித்தார்.