இந்தியா

9 நிமிடங்கள் மின்விளக்குகளை அணையுங்கள்! நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி விடுத்த வேண்டுகோள் !

Summary:

Modi speech to india people about corono

சீனாவில் தோன்றிய கொரோனோ வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அதிதீவிரமாக பரவி வருகிறது.  இந்த கொடூர வைரஸ் இந்தியாவிலும் பரவியநிலையில், தற்போது 1600க்கும் மேற்பட்டோர்  பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனோவை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு ஊரடங்கு பிறப்பிக்கபட்டுள்ளது.  இந்நிலையில் சற்று நிமிடங்களுக்கு முன்பு பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்  மக்கள் அனைவரும் இணைந்து கொரோனோவை கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளீர்கள். ஒட்டுமொத்த நாட்டவரும் கொரோனாவிற்கு எதிரான யுத்தம் நடத்தியதற்கு மிக்க நன்றி. வீட்டில் இருக்கும் மக்கள் அனைவரும் இறைவனின் வடிவம். நாம் எடுக்கும் நடவடிக்கைகள் உலகநாடுகளுக்கு எடுத்துக்காட்டாக உள்ளது. வீட்டில் இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறோம்.

மேலும் ஏப்ரல் 5 ம் தேதி வரை மிக சவாலாக உள்ளது.  ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணி முதல் ஒன்பது நிமிடங்கள் வீட்டின் மின்விளக்குகளை அணைத்துவிட்டு, வீட்டில் அகல்விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் விளக்குகள் அல்லது செல்போன் மூலமாக ஒளி ஏற்ற வேண்டும். வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியைப் பரப்பும் வகையில் அவற்றை ஏற்றி வைக்க வேண்டும் என மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.


Advertisement