இந்தியா UC Special

இன்று இரவு மீண்டும் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி!

Summary:

Modi speech about corono at today night

சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகெங்கும் 170க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிதீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் வைரஸ் பரவிய நிலையில் இதுவரைக்கும் 450 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் மேலும் 9 பேர்  உயிரிழந்துள்ளனர்.

 இந்நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் நாடுமுழுவதும் பெரும் பீதியில் உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் கடுமையான தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவும்  பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் மக்கள் பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் பல இடங்களில் சுற்றி வருகின்றனர்.

 இந்நிலையில் இந்திய பிரதமர் மோடி கடந்த19ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது கொரோனாவை கட்டுபடுத்த 22 ஆம் தேதியன்று காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து வீடுகளுக்குள் இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி மக்கள் அனைவரும் பின்பற்றினர். ஆனால் மறுநாளே இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். இந்நிலையில் மக்கள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் நடந்து கொள்வது சரியல்ல என பிரதமர் மோடி  ஆதங்கப்பட்டார்.

இந்நிலையில் பிரதமர் மோடி இன்று இரவு 8 மணி அளவில் மீண்டும் தொலைக்காட்சியில் உரையாற்ற உள்ளார். இந்நிலையில் அவர் புதிய உத்தரவுகள் மற்றும் வேண்டுகோள்களை விடுப்பார் என எதிர்பார்க்க படுகிறது.


Advertisement