"சுயலாபத்துக்காக எதையும் செய்யமாட்டேன்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி

"சுயலாபத்துக்காக எதையும் செய்யமாட்டேன்" நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாக்குறுதி


Modi first speech after victory

நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. இதுவரை வெளிவந்துள்ள முடிவுகளின் படி பாஜக கூட்டணி 348 இடங்களிலும் காங்கிரஸ் கூட்டணி 90, மற்றவை 103 இடங்களில் பெரும்பான்மை பெற்றுள்ளன. 

மோடி தலைமையிலான பாஜக கட்சி மட்டும் 300 இடங்களுக்கு மேல்  வென்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கிறது. மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமர் ஆகிறார். 

pm modi

இந்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து பாஜக தலைமை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி "சுய நலத்திற்காக எதையும் செய்யமாட்டேன்; ஏழ்மையை ஒழிப்பதே குறிக்கோள்" என பேசியுள்ளார். 

மேலும் பேசிய அவர், கூட்டாச்சி முறையை பாதுகாப்போம். தேர்தல் அமைதியான முறையில் நடப்பதற்கு உதவிய தேர்தல் ஆணையத்துக்கும், பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கும் நன்றி. இந்தியா எங்களை வெற்றியடைச் செய்வதில் ஒற்றுமையாக இருந்துள்ளது. இது புதிய இந்தியாவிலிருந்து பிறக்கப்பட்ட ஆணை.

pm modi

பா.ஜ.க எதிர் கட்சிகளையும் உடன் அழைத்துச் செல்ல தயாராக உள்ளது. இந்த மிகப்பெரும் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சிகளுக்கு நன்றி. இந்த வெற்றியை நாட்டின் வளர்ச்சிக்கும் இளைஞர்களுக்கும் சமர்பிக்கிறேன். என்னுடைய பணியின்மீது எழுப்பப்படும் விமர்சனங்களை எதிர்கொள்ள தயாராகவே உள்ளேன். நான் தவறு செய்யலாம். ஆனால், கட்டாயம் தவறான நோக்கத்தில் அதனை செய்யமாட்டேன். 

என்னுடைய வாழ்நாளையும், என்னுடைய முழு ஆற்றலையும் இந்த நாட்டின் மக்களுக்காக தியாகம் செய்வேன். அரசியல் அமைப்பை மாற்றுவதும் அதனை மேம்படுத்துவதும்தான் பா.ஜ.க எண்ணம். வறுமையை ஒழிப்பதை பா.ஜ.கவின் இலக்கு. 

pm modi

இது மோடிக்கான வெற்றி இல்லை. சிறந்த வாழ்வாதரத்தில் வாழ வேண்டும் என்று விரும்பியவர்களுக்கான வெற்றி. கடந்த ஐந்து ஆண்டுகள் இந்த அரசு மக்களுக்காக உழைத்தது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். நாங்கள், பா.ஜ.கவின் பார்வையில் உறுதியாக இருப்போம். மக்கள் முன்னேற்றத்துக்கா வாக்களித்துள்ளனர் என தெரிவித்தார்.