இந்தியா

மன் கி பாத் நிகழ்ச்சியில் என்ன பேசவேண்டும்? நாட்டுமக்களிடம் யோசனை கேட்கிறார் பிரதமர் மோடி!

Summary:

Modi ask idea to people for mannki baat show

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று வானொலியில் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்களிடம் உரையாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்த மாதத்திற்கான நிகழ்ச்சி வரும் 28ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் என்ன பேச வேண்டும், நல்லதொரு தலைப்பைக் கூறுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மன் கி பாத் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு இன்னும் இரு வாரங்கள் உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தான் என்ன பேச வேண்டும் என்ற யோசனைகளை, கருத்துக்களையும் நீங்கள் பகிர்ந்து கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். கொரோனோவை எதிர்த்து போராடுவது குறித்தும்,  இதர விஷயங்கள் குறித்தும் நிறைய யோசனைகளை தெரிவிப்பீர்கள் என நம்புகிறோம் என பதிவிட்டுள்ளார்.

மேலும் இதனை மை கவ்,  நமோ ஆப்  இணையதளத்தில் பதிவிடலாம். அல்லது 1800117800 என்ற கட்டணம் இல்லா தொலைபேசி எண்ணிற்கு பேசி பதிவு செய்த குரல்பதிவுகளை அனுப்பலாம் எனவும் அழைப்பு விடப்பட்டுள்ளது. 


Advertisement