தறிகெட்டு காரை இயக்கிய எம்.எல்.ஏ மருமகன்; 19 வயது இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!MLA Dilip Mohite Nephew Kills 19 Year Old Youth in Car Bike Accident 

 

எம்.எல்.ஏ மருமகன் தவறான திசையில் காரை இயக்கி இளைஞரின் உயிரை பறிக்க காரணமாக இருந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே - நாசிக் தேசிய நெடுஞ்சாலையில், நேற்று இரவு எஸ்.யு.வி வாகனம் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கிய ஓம் சுனில் பலராவ் (19) என்பவர் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். 

இதையும் படிங்க: ஓட்டுனரின் உறக்கத்தால் உருண்டு உருக்குலைந்த கார்; ஒருவர் பலி., 5 பேர் படுகாயம்.. பதறவைக்கும் வீடியோ.!

எம்.எல்.ஏ மருமகன் அதிர்ச்சி செயல்

விபத்தை ஏற்படுத்திய காரை மக்கள் சிறைபிடித்த நிலையில், விசாரணையில் கார் தேசியவாத காங்கிரஸ் கட்சி அஜித் பவார் அணியை சேர்ந்த எம்.எல்.ஏ திலீப் மொஹிதே பாட்டில் மருமகன் மயூர மொகிதே என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. 

காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

இந்த விஷயம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், 34 வயதுடைய மொகிதேவை, புனே மாஞ்சார் காவல் துறையினர் கைது செய்தனர்.  சாலையின் எதிர்திசையில் பயணம் செய்த கார், இருசக்கர வாகனத்துடன் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி இருக்கிறது. 

அடுத்தடுத்து மராட்டியத்தில் சோகம்

ஏற்கனவே மராட்டிய மாநிலத்தில் சிறுவன் கார் ஒட்டி 2 ஐடி ஊழியர்களை கொன்றது, புனே சீரம் இன்ஸ்டிடியூட்-க்கு சொந்தமான கார் ஒன்று டெலிவரி பாயை ஏற்றுக்கொண்டது என அடுத்தடுத்த சோகம் நடந்து வருகிறது. இதற்கிடையில், எம்.எல்.ஏ மருமகன் கார் ஒட்டி விபத்தை ஏற்படுத்தியதால் இளைஞர் பலியாகி இருக்கிறார்.

இதையும் படிங்க: திருமண விழாவிற்கு சென்றபோது நேர்ந்த சோகம்.! பரிதாபமாக பறிபோன 13 உயிர்கள்!!