தமிழகம் இந்தியா

நேற்று மின்விளக்குகளை அணைத்ததால் நடந்த மாற்றம்! அமைச்சர் விளக்கம்!

Summary:

minister talk about yesterday light off

மின் விளக்குகளை அணைத்து இயக்கிய சமயத்தில், மின் விநியோகம் செய்வதில் சிக்கலும் ஏற்படவில்லை என்றும், தினசரி மின்சாரத்தின் தேவை 5 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைந்துள்ளது என்றும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.

பிரதமர் மோடி ஏப்ரல் 5ம் தேதி இரவு 9 மணிக்கு ஒரு விளக்கேற்றி ஒளிரவிடுங்கள் என பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனையடுத்து நாட்டின் மக்கள் அனைவரும் மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க கடைபிடித்துள்ளனர். நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகளை அணைத்ததன் மூலம் 31 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின்சார பயன்பாடு குறைந்திருந்ததாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர், குறிப்பிட்ட நேர இடைவெளியில் 1,200 மெகாவாட் மின்சாரம் குறையும் என எதிா்பாா்த்திருந்தோம். ஆனால் 2,200 மெகாவாட் மின்சாரம் குறைந்திருந்தது. இந்தியா முழுவதும் 31 ஆயிரம் மெகாவாட், தென்னகப் பகுதியில் 6600 மெகாவாட் மின்சாரம் குறைந்தது. குறிப்பாக சென்னையில் மட்டும் 350 மெகாவாட் குறைந்திருந்தது என அமைச்சர் தெரிவித்தார்.


Advertisement