அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரையரங்கில் பார்த்த சினிமா; படத்துக்கு செம பாராட்டு.!

அமைச்சர் நிர்மலா சீதாராமன் திரையரங்கில் பார்த்த சினிமா; படத்துக்கு செம பாராட்டு.!



,minister nirmala chetaraman watch flim uuri

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் ’உரி’ என்கிற இந்தி படத்தை முன்னாள் ராணுவ அதிகாரிகளுடன் அமர்ந்து பார்த்து ரசித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு இந்தியாவிற்குள் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வீரர்கள் தங்கியிருந்த முகாமில் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தீவிரவாதிகள் தங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்து 'துல்லியமான தாக்குதல்' (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) எனும் ஆப்ரேஷனை வெற்றிகரமாக நடத்தினர்.

NIRMALA SITHARAMAN

இந்திய வீரர்களின் இந்த சாதனையை மையமாக வைத்து ‘உரி: தி சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இந்தி திரைப்படம் தயாராகி சமீபத்தில் ரிலீசானது. 

பல மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்தப் படத்தை பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பெங்களூரு பிவிஆர் தியேட்டரில் முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் வீரர்களுடன் அமர்ந்து கண்டுகளித்தார். பிறகு படக்குழுவுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.