திடீரென இடிந்து விழுந்த சுண்ணாம்புக்கல் சுரங்கம்.! இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள்!

திடீரென இடிந்து விழுந்த சுண்ணாம்புக்கல் சுரங்கம்.! இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்கள்!


mine-collapse-in-malgaon-chattisgarh

சத்தீஸ்கர் மாநிலத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் இடிந்து விழுந்ததில் அங்கு பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் மால்கான் என்ற கிராமத்தில் சுண்ணாம்புக்கல் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது.

அங்கு சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் திடீரென சுண்ணாம்புக்கல் சுரங்கத்தின் மேற்பகுதி இன்று இடிந்து விழுந்துள்ளது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

chattisgarh

 இந்த நிலையில் சுரங்கம் இடிந்து விழுந்தது குறித்து மீட்பு குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இந்த விபத்தில் சிக்கி ஏழு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.