நள்ளிரவில் காதலி வீட்டிற்குள் நுழைந்த காதலன்.. வெறியோடு சென்றதால் நிகழ்ந்த விபரீதம்.!

நள்ளிரவில் காதலி வீட்டிற்குள் நுழைந்த காதலன்.. வெறியோடு சென்றதால் நிகழ்ந்த விபரீதம்.!


men-fire-accident-in-kerala

காதலித்த பெண்ணை கரம் பிடிக்க இயலாத விரக்தியில், பெண் மீது தீ வைத்து எரிக்க முயன்ற காதலன் உடல் கருகி பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள கோழிக்கோடு மாவட்டம், நந்தபுரம் வலையத்தை சேர்ந்த 42 வயதான ரத்னேஷ் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை பல வருடங்களாக காதலித்து வந்துள்ளார். மேலும், பெண்ணின் பெற்றோரிடம் தனக்கு தான் உங்கள் பெண்ணை திருமணம் செய்து தர வேண்டும் எனவும் கூறியுள்ளார். 

ஆனால், அந்தப் பெண்ணின் வீட்டில் இவர்களின் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். மேலும், பெண்ணுக்கு வேறு ஒரு வசதியான மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்துள்ளனர். இதனைக் கேள்விப்பட்டு ஆவேசமடைந்த ரத்னேஷ் பெண்ணின் வீட்டிற்கு நள்ளிரவில் சுவர் ஏறி குதித்து சென்று வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

fire accident

அத்துடன் வீட்டின் முதல் மாடிக்கு ஏணி வைத்து ஏறி காதலி மற்றும் அவரது சகோதரன், தாய் ஆகியோர் உறங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்து, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்பொழுது அவர் வைத்த தீயிலிருந்து  காதலி மற்றும் அவரின் குடும்பத்தார் சிறு காயங்களுடன் தப்பி வெளியில் ஓடி விட்டனர்.

ஆனால், ரத்னேஷ் வைத்த தீயில் அவரே சிக்கிக்கொண்டு உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.