ஒத்த நாற்காலிக்கு கண்ணீர் விட்ட பாட்டி.. திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை!

ஒத்த நாற்காலிக்கு கண்ணீர் விட்ட பாட்டி.. திருமணத்தையே நிறுத்திய மாப்பிள்ளை!



marriage-stop-for-chair-in-uttarpradesh

உத்திர பிரதேச மாநிலத்தில் பாட்டி உட்கார நாற்காலி தராததால் மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்தஷாஹர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது திருமண மண்டபத்தில் தனது பாட்டி தரவில்லை என கூறப்படுகிறது. இதனால் இரு குடும்பங்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

UttarPradesh

இதனையடுத்து அந்த வயதான பாட்டி தனது பேரனிடம் உட்கார ஒரு நாற்காலி கூட கொடுக்கவில்லை என அழுது கொண்டே கூறியுள்ளார். இதனையடுத்து இந்த விவகாரம் பெரிதாகிய நிலையில், மாப்பிள்ளை குழப்பத்தில் இருந்துள்ளார்.

இதனையடுத்து மணப்பெண்ணிடம் நீ எங்கள் வீட்டிற்கு வந்தால் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் மிரட்டியுள்ளார். இதனைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றிய நிலையில் மாப்பிள்ளை திருமணத்தை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

UttarPradesh

இதற்கு சம்மதம் தெரிவித்த பெண்ணின் வீட்டார் திருமண வரவேற்புக்காக செலவழித்த தொகையை செலுத்துமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அந்த தொகையை கொடுத்துவிட்டு மாப்பிள்ளை வீட்டார் சென்றுள்ளனர்.