தாலி கட்டும் நேரத்தில் மணமகளைப் பற்றி வந்த அதிர்ச்சி செய்தி! விட்டுக்கொடுக்காத மணமகன்.! நெகிழ்ச்சி வீடியோ.!
ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் இளம் ஜோடியினருக்கு, கடந்த வாரம் திருமணம் முடிவு செய்யப்பட்டு திருமணத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தன. இந்நிலையில், திருமணத்திற்கு 2 நாட்கள் முன்னதாக மணப்பெண்ணின் நெருங்கிய உறவினருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அவர்களுடன் தொடர்பில் இருந்த மணப்பெண் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
கொரோனா பரிசோதனை செய்ததில் மணப்பெண் மற்றும் அவரது தாயாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதை அறிந்த சுகாதாரத்துறை மற்றும் மருத்துவ ஊழியர்கள் மணப்பெண் மற்றும் அவரது தாயாரை அழைத்து வர, அவர்கள் வீட்டிற்கு சென்றனர்.
#WATCH Rajasthan: A couple gets married at Kelwara Covid Centre in Bara, Shahbad wearing PPE kits as bride's #COVID19 report came positive on the wedding day.
— ANI (@ANI) December 6, 2020
The marriage ceremony was conducted following the govt's Covid protocols. pic.twitter.com/6cSPrJzWjR
ஆனால், மணப்பெண் குடும்பத்தினர் திருமணம் நடைபெறும் இடத்திற்கு சென்றுவிட்டதாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருமணம் நடைபெறும் பகுதிக்கு சென்றனர். அங்கு சென்ற சுகாதாரத்துறையினர், கொரோனா தொற்று உறுதியான தகவலை, மணமக்களிடம் கூறி, கொரோனா சிகிச்சை மையத்திற்கு, மணமகள் மற்றும் அவரது தாயாரை அழைத்துச் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளனர்.
தாலி கட்டும் நேரத்தில், இதைக் கேட்டு மணமக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே திருமண தேதியை உறுதிப்படுத்திவிட்டதால், இனிமேல் தங்களது வழக்கப்படி திருமண தேதியை மாற்றமுடியாது என்று சுகாதாரத்துறை ஊழியர்களிடம் மனமக்களின் குடும்பத்தினர் கெஞ்சி வற்புறுத்தியுள்ளனர். இந்தநிலையில், கொரோனா சிகிச்சை மையத்திலேயே, உறவினர்கள் யாரும் இன்றி திருமணம் நடத்த அனுமதி கொடுத்தனர் சுகாதாரத்துறையினர். இதனையடுத்து கொரோனா சிகிச்சை மையத்தில் திருமணம் நடந்துள்ளது. திருமணத்திற்குப் பின்னர், மணமகள் மற்றும் அவரது தாயார் கொரோனா சிகிச்சை மையத்தின் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர்.