ஒரு நிமிடத்தில் 109 முறை புஷ் அப்.. கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெற்ற இளைஞர்..! ரெக்கார்ட் பிரேக்கிங்..!!manipur-youngster-thounaojam-niranjoy-singh-guinness-re

மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த தௌனாஜாம் நிரன்ஜோய் சிங் (Aged 24, Thounaojam Niranjoy Singh) என்பவர் புஷ் அப் செய்வதில் கின்னஸ் சாதனை புரிந்துள்ளார். தனது கை விரல்களால் ஒரு நிமிடத்தில் தொடர்ந்து புஷ் அப் செய்து கின்னஸ் சாதனையை செய்துள்ளார். 

ஒரு நிமிடத்திற்குள் நிரன்ஜோய் சிங் 109 முறைகள் புஷ் அப் செய்து இருக்கிறார். முன்னதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் கை விரலால் புஷ் அப் செய்ததில், ஒரு நிமிட சாதனை 105 முறைகள் என்று இருந்த நிலையில், அந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது.

அந்த 105 முறைகள் சாதனையும் இரண்டு முறை இவராலேயே பதிவு செய்யப்பட்டுள்ளது. தனது சாதனையை தானே முறியடிக்க முடிவு செய்து, அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு, தற்போது ஒரு நிமிடத்தில் 109 முறை புஷ் அப் எடுத்து ரெக்கார்ட் பிரேக்கிங் செய்துள்ளார்.