BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
மீண்டும் ஒரு குஜராத்தா.? மணிப்பூரில் கர்ப்பிணி பெண்ணுக்கு நேர்ந்த உச்சகட்ட கொடூரம்.!
மணிப்பூர் மாநிலத்தில் மெய்தி மற்றும் குக்கி சமூகங்களுக்கிடையேயான மோதல் மிகப்பெரிய இனக் கலவரமாக உருவெடுத்து இருக்கிறது. இந்தக் கலவரத்தில் தங்களை காத்துக் கொள்ள மக்கள் போராடி வருகிறார்கள்.
இந்நிலையில் மெய்தி சமூக இளைஞரை திருமணம் செய்து கொண்ட குக்கி சமூகத்தைச் சார்ந்த கர்ப்பிணிப் பெண் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் வெளியாகி மக்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
குக்கி சமூகத்தைச் சேர்ந்த நகோய் ரிச்சோங் என்ற பெண் மெய்தி சமூகத்தைச் சேர்ந்த ஜதீன் சிங் என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் நிக்கோய் மூன்றாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் கடந்த மே மாதம் கலவரம் உச்சகட்டம் அடைந்ததை தொடர்ந்து அவர் அங்குள்ள மெய்தி அகதிகள் முகாமில் தஞ்சமடைந்தார். ஆனால் நகோய் ரிச்சோங். அவர் குக்கீ சமூகத்தைச் சேர்ந்தவர் என தெரிந்ததும் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் அகதிகள் முகாமில் இருந்து விரட்டி விட்டனர். தற்போது அவரும் அவரது குழந்தைகளும் ராணுவ பாதுகாப்பில் உள்ளனர். அவரது கணவருக்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. குஜராத்தில் கர்ப்பிணி பெண்ணின் சிசுவை கூட கொன்று எரித்த சம்பவம் குறிப்பிடத்தக்கது.