கொடூரத்தின் உச்சம்...துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில்... கடனை திருப்பி கேட்ட தந்தையின் காதலி.!

கொடூரத்தின் உச்சம்...துண்டு துண்டாக வெட்டி ஃபிரிட்ஜில்... கடனை திருப்பி கேட்ட தந்தையின் காதலி.!


man-who-murdered-his-father-lover-and-chopped-her-body

கடனை திருப்பி கேட்ட பெண்ணை கொலை செய்து அவரது உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி பிரிட்ஜ்குள் வைத்து பூட்டிய  சம்பவம் தெலுங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது இது தொடர்பாக  வாலிபர் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் சேர்ந்தவர் அனுராதா(55). இவர் தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்தார். ஹைதராபாத் மலை பேட் பகுதியைச் சேர்ந்தவர் சந்திர மௌலி. வியாபாரம் செய்து வருகிறார். இவரது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சந்திர மௌலியின் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது அனுராதாவிற்கும் சந்திர  மௌலியின் தந்தைக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டிருக்கிறது.

Indiaஇந்தப் பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறி உள்ளது. இதனைத் தொடர்ந்து அனுராதாவை தனது வீட்டிற்கு கீழ் பகுதியிலேயே குடியமர்த்தி இருந்தார். சந்திர மௌலியின் தந்தை. சந்திர மௌலி செய்து வந்த ஆன்லைன் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே அனுராதா விடமிருந்து 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார். இந்தக் கடனை அனுராதா திருப்பி கேட்டதால் கடும் மன உளைச்சலில் இருந்திருக்கிறார் சந்திரமௌலி. இந்நிலையில் கடனை அடிக்கடி திருப்பி கேட்கும் அனுராதாவை கொலை செய்ய திட்டம் தீட்டி இருக்கிறார்.

Indiaஇதனைத் தொடர்ந்து அனுராதாவின் வீட்டிற்கு சென்ற சந்திர மௌலி உறங்கிக் கொண்டிருந்த அனுராதாவை கடுமையாக தாக்கி கொலை செய்திருக்கிறார். பின்னர் அவரது உடலை துண்டுகளாக வெட்டி  வீட்டிலிருந்த பிரிட்ஜில் வைத்து அந்த அறையை பூட்டிவிட்டு அனுராதாவின் தலையை ஒரு பிளாஸ்டிக் பேக்கில் போட்டு எடுத்துச் சென்று ஆற்றில் வீசி இருக்கிறார். இந்நிலையில் அனுராதாவை காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர். அனுராதாவை காவல்துறையினர் தேடிக் கொண்டிருந்தபோது ஆற்றங்கரையில் ஒரு தலை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அழுகிய நிலையிலிருந்த தலையை மீட்ட காவல்துறையினர் அது அனுராதாவின் தலை தான் என கண்டறிந்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றிக் கொண்டிருந்த சந்திர மௌலியை கைது செய்து விசாரித்தனர். அப்போது தனக்கு கடனாக கொடுத்த காசை அனுராதா திருப்பி கேட்டதால் அவரை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார் சந்திரமௌலி. இதனைத் தொடர்ந்து சந்திர மௌலியை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.̓