இந்தியா மருத்துவம்

ஆவி புடிக்கிறதுல இப்போ இவர்தான் பேமஸ்!! எல்லா புத்திசாலியும் நம்ம ஊர்லதான் இருக்காங்க!! வைரலாகும் வீடியோ.. நீங்களே பாருங்க!!

Summary:

குக்கரை வைத்து வித்தியாசமான முறையில் ஆவிபிடிக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி

குக்கரை வைத்து வித்தியாசமான முறையில் ஆவிபிடிக்கும் நபர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துவரும்நிலையில் பெரும்பாலான இடங்களில் மக்கள் தங்களுக்கு தெரிந்த நாட்டு வைத்தியங்களை செய்துவருகின்றனர். அதில் பெரும்பாலானோர் செய்துவரும் சிகிச்சையில் ஒன்று ஆவி பிடிப்பது. ஆவி பிடிப்பதால் நமது தொண்டை, நாசியில் உள்ள கொரோனா வைரஸ் இறந்துவிடும் என்பது அனைவரின் நம்பிக்கை.

இந்த ஆவிபிடிக்கும் வழக்கத்தை பல இடங்களில் மக்கள் பலவிதங்களில் மேற்கொண்டுவருகின்றனர்.  இந்நிலையில் நபர் ஒருவர் குக்கரில் டியூபை சொருகி, மறுபுறம் புனல் ஒன்றை வைத்து நின்றுகொண்டே ஆவி பிடிக்கிறார். பார்ப்பதற்கு நன்றாக இருந்தாலும், அந்த நபரின் முயற்சியை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்துவருகின்றனர். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement