அடக்கொடுமையே... 12 வயது மகளை நாசம் செய்த தந்தை.!! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்.!!man-sexually-assaulted-and-murder-his-12-year-old-daugh

தெலுங்கானா மாநிலத்தில் தனது ஆசைக்கு இணங்க மறுத்த 12 வயது சிறுமியை அவரது தந்தையே கொலை செய்து விட்டு நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளியாகி இருக்கிறது.

 

தெலுங்கானா மாநிலம் மஹூபாபாத் பகுதியைச் சேர்ந்த குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹைதராபாத்திற்கு குடி பெயர்ந்தனர். இந்நிலையில் தனது 12 வயது மகளை காணவில்லை என அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நபர் காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார். ஜூன் 14ஆம் தேதி மளிகை கடைக்குச் சென்ற மகள் வீடு திரும்பவில்லை என அவர் தனது புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

Indiaஇந்த வழக்கு தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மை வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது . மேலும் காவல்துறையின் விசாரணையில் தந்தையே தனது மகளை கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது. தனது மகளை மஹூபாபாத் அழைத்துச் செல்வதாக கூறி இரு சக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்ற தந்தை அங்குள்ள ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் .

இதையும் படிங்க: கொடூரம்... 17 வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கு .!! தந்தைக்கு 104 வருட சிறை.!!

அந்தக் காட்டுப் பகுதியில் வைத்து தான் பார்த்த ஆபாச படத்தில் வருவது போன்று தன்னுடன் இருக்க வேண்டும் என தனது 12 வயது மகளிடம் தந்தை கூறியிருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மகள் இது தொடர்பாக தாயிடம் கூறுவேன் என தந்தையை மிரட்டி உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தந்தை தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். மேலும் தான் கொலை செய்ததை மறைப்பதற்காக மகளை காணவில்லை என காவல்துறையிடம் புகார் தெரிவித்து நாடகம் ஆடியதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.

இதையும் படிங்க: தறிகெட்டு காரை இயக்கிய எம்.எல்.ஏ மருமகன்; 19 வயது இளைஞர் துள்ளத்துடிக்க பலி..!