இந்தியா

ஆசைஆசையாக வளர்த்த சண்டைக்கோழியால் துடிதுடித்து உயிரிழந்த உரிமையாளர்! வெளியான பகீர் சம்பவம்!

Summary:

Man died by attacking fighting cock

விலங்குகளை கொடுமைப்படுத்துவதை தடுக்கும் வகையில் சேவல்சண்டை  போட்டி அரசால் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதனையும் மீறி தற்போதும் சட்டவிரோதமாக இந்தியாவின் பல பகுதிகளில் சேவல் சண்டை போட்டிகள் நடைபெற்றுதான் வருகிறது.

இந்நிலையில் ஆந்திராவின் பிரகதவரம் என்ற கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகர சங்கராந்தியின் வருடாந்திர கொண்டாட்டமாக சேவல்போட்டி நடைபெற்றது. அப்போட்டியில் அந்த பகுதியை சுற்றியுள்ள பல கிராமத்தில் இருந்தும் சண்டைக் கோழிகள் கொண்டுவரப்பட்டு பங்கேற்றது.

மேலும்  55 வயது நிறைந்த சின்னவெங்கடேஸ்வர ராவ் என்பவரும் தன்னுடைய சேவலுடன் போட்டியில்   கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது சேவலின் கால்களில் கட்டியிருந்த பிளேடு அவரது கழுத்துப்பகுதியில் கடுமையாக தாக்கியது. இதில் படுகாயமடைந்து  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் இது குறித்து காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், இந்த திருவிழாவிற்கு முன்பாகவே பல சேவல் அரங்கங்கள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. ஆனாலும் பலர் ஆங்காங்கே கூடாரங்களை அமைத்து இது போன்ற போட்டிகளை நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சண்டை அமைப்பாளர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.


Advertisement