இந்தியா

12 மணிநேரம் கெஞ்சிய மனைவி..! அனுமதி சீட்டு வாங்க 5 ரூபாய் இல்லாமல் மனைவி கண்முன்னே உயிரிழந்த கணவன்.! சோக சம்பவம்.!

Summary:

Man die outside hospital who unable to buy entrance sheet for 5 rs

மருத்துவமனையில் அனுமதி சீட்டு வாங்க வெறும் 5 ரூபாய் பணம் இல்லாமல் மனைவியின் முன்னே கணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அசோக்நகர் பகுதியை சேர்ந்தவர் சுனில் தக்காட். இவர் நீண்ட நாட்களாக காச நோயினால் அவதிப்படுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை இவரது உடல்நிலை மிக மோசமானதை அடுத்து இவரது மனைவி அவரை மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளார்.

நோயாளியை மருத்துவமனையில் அனுமதிக்கவேண்டுமென்றால் 5 ரூபாய் செலுத்தி அனுமதி சீட்டு பெறவேண்டும் என அங்கிருந்த ஊழியர்கள் கூறியதாக கூறப்படுகிறது. ஆனால் தன்னிடம் 5 ரூபாய் பணம் இல்லை எனவும், தனது கணவனை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை வழங்குமாறு சுனில் தக்காட்டின் மனைவி கேட்டுள்ளார்.

அனுமதி சீட்டு இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்க முடியாது என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அருகில் இருந்தவர்களிடம் 5 ரூபாய் கொடுத்து உதவுமாறு சுனில் தக்காடின் மனைவி கெஞ்சியுள்ளார். இப்படியே 12 மணி நேரம் கடந்துவிட்ட நிலையில் அவருக்கு யாரும் 5 ரூபாய் கொடுத்து உதவவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நீண்ட நேரமாக சிகிச்சை இல்லாமல் கடும் நோயினால் தவித்துவந்த சுனில் தக்காட் மனைவி கண்முன்னே மருத்துவமனை வளாகத்திலையே உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Advertisement