அரசின் அதிரடி அறிவிப்பு! வெங்காயம் வாங்க சென்றவர் திடீர் மரணம்! வெளியான மனதை உருக்கும் சோக சம்பவம்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா

அரசின் அதிரடி அறிவிப்பு! வெங்காயம் வாங்க சென்றவர் திடீர் மரணம்! வெளியான மனதை உருக்கும் சோக சம்பவம்!

இந்தியாவில் வெங்காய விலை நாளுக்குநாள் உச்ச அளவில் உயர்ந்துவருகிறது. மேலும் இதனால் மக்கள் பெரும் அவதிபட்டுவருகின்றனர். இந்நிலையில் இதை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. 

இந்நிலையில் ஆந்திரா மாநிலஅரசு உழவர் சந்தைகளில் தனிநபர் ஒருவருக்கு ஒருமுறை ஒரு கிலோ வெங்காயம் 25 ரூபாய் என விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இதனை வாங்க அனைத்து தரப்பு மக்களும் வரிசையில் காத்து கிடக்கின்றனர். இந்நிலையில் வரிசை 3 கிலோ மீட்டர் வரை நீண்டுள்ளது.

இவ்வாறு கிருஷ்ணா மாவட்டம் குடிவாடா நகரில் அமைந்துள்ள உழவர் சந்தையில்சாம்பையா என்பவர் வெங்காயம் வாங்குவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். 

இந்நிலையில் அங்கிருந்தவர்கள் பதறியடித்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் . ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக மரணமடைந்தார்.  இந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுதியுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo