அடேங்கப்பா! ஒன்றல்ல, இரண்டல்ல.. உச்சகட்ட ஆடம்பரத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம்! ஆச்சரியத்தில் உறைய வைத்த வீடியோ!!man-cut-550-cakes-on-his-birthday

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தங்களது பிறந்தநாள் என்றாலே ஒரு பூரிப்பு இருக்கும். குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் அந்த நாளை மகிழ்ச்சியாக, உற்சாகத்துடன் செலவிட எண்ணுவர். மேலும் தற்காலத்தில் பிறந்த நாளில் கேக் வெட்டுவது என்பது கலாச்சாரமாகவே மாறியுள்ளது. 

சாமானியர்கள் முதல் கோடீஸ்வரர்கள் வரை அனைவரும் வசதிக்கேற்ப கேக்குகளை வாங்கி அதனை வெட்டி பிறந்தநாளை கொண்டாடுவர். இந்நிலையில் தனது பிறந்தநாளை மறக்கமுடியாத நிகழ்வாக மாற்ற எண்ணிய நபர் ஒருவர் கேக் வெட்டுவதிலேயே அனைவரையும் வாயடைக்க வைத்துள்ளார். மும்பை காந்திவலியைச் சேர்ந்தவர் சூர்யா ரதுரி. இவர் தனது பிறந்தநாளில் சுமார் 550 கேக்குகளை வெட்டியுள்ளார்.

மொத்தம் மூன்று மேஜைகளில் வரிசையாக வைக்கப்பட்ட கேக்குகளை அந்த நபர் தனது இரு கைகளிலும் கத்தியை பிடித்துக்கொண்டு சரமாரியாக வளைத்து வளைத்து வெட்டி முடித்துள்ளார். அதற்கென நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு மீடியாக்களும் குவிந்துள்ளது. இந்நிலையில் அந்த கேக் வெட்டும் வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.