9- வது திருமணத்திற்கு குஷியாக தயாரான பெண் கைது.! போலீஸ் அதிரடி.!



Maharashtra women cheating 9 for fake marriage

பெண் கிடைக்காமல் பலரும் அவதிப்பட்டு வரும் நிலையில், சமூக வலைதளங்கள் மற்றும் மேட்ரிமோனி சைட்களை பயன்படுத்தி வரன் தேடுகின்றனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் திருட்டு கும்பல் அவர்களிடம் பணம், நகை உள்ளிட்டவற்றை பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த ஒரு ஆசிரியை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூர் பகுதியில் சமீரா பாத்திமா என்ற பெண் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

marriage

இந்த நிலையில், மேட்ரிமோனி வெப்சைட்களை பயன்படுத்தி தன்னை ஒரு வரனாக பதிவு செய்து கொண்டார். இந்த பக்கங்களில் வரும் மறுமண அழைப்பு மற்றும் வயது அதிகமான வரன்களை குறிவைத்து திருமண ஆசை காட்டியுள்ளார். அவர்களுடன் பழகி தன்னுடைய வலையில் வீழ்த்தி பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்துள்ளார். 

இதையும் படிங்க: "ஆண்ட்டி ப்ளீஸ் வேண்டாம்" பதறிய சிறுவன்.. பாலியல் பலாத்காரம் செய்த 28 வயது பெண்.!

கடந்த 15 ஆண்டுகளாக பெரும் பணக்காரர்களை குறி வைத்து சமீரா இத்தகைய மோசமான செயலில் ஈடுபட்டு வந்த நிலையில், தற்போது போலீசில் பிடிபட்டுள்ளார். ஏற்கனவே, 8 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய அவர் தற்போது 9-வது திருமணத்திற்கு தயாராகி இருந்துள்ளார். அந்த சமயத்தில்தான் போலீசார் சமீரா பாத்திமாவை கையும், களவுமாக பிடித்துள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: அந்த காரணத்துக்காக மனைவியை துணியை அவிழ்த்து.. கணவனின் கொடூர செயல்.!