அருவி நீரில் ஆனந்த குளியல்; நொடியில் நீருடன் இழுத்து செல்லப்பட்ட இளைஞர்.. இறுதி நொடியின் பகீர் காட்சிகள்.!Maharashtra Pune man died on camera swept away by water 

 

மராட்டிய மாநிலத்தில் பருவமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நீர்நிலைகள், அணைகள் நிரம்பி வழிகின்றன. பல அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சமீபத்தில் புனேவில் வெள்ளத்தின் பிடியில் சிக்கி 5 பேர் அடித்து செல்லப்பட்டு பலியானதாக அஞ்சப்படுகிறது.

இதனிடையே, கடந்த சனிக்கிழமை அருவியில் இருந்து ஆற்றுக்கு நீர் செல்லும் பாதையில் குளித்துக்கொண்டு இருந்த இளைஞர் மாயமான வீடியோ வெளியாகி இருக்கிறது. பிம்பிரி சின்சிவாவாத் பகுதியை சேர்ந்த இளைஞர் ஸ்வப்னில் தவ்தே. 

இதையும் படிங்க: ஜெட் வேகத்தில் டூவீலரில் பயணம்.. சாலையோர டிவைடர் நெஞ்சில் சொருகி இளைஞர் பரிதாப பலி.!

இன்பசுற்றுலாவில் சோகம்

இவர் கடந்த சனிக்கிழமை நண்பர்கள் 32 பேருடன் அங்குள்ள ப்ளஸ் வேலி தாமஹினி காட் நீர்வீழ்ச்சிக்கு வார இறுதி விடுமுறையை முன்னிட்டு சென்றுள்ளார். அங்கு அருவியில் குளித்துக்கொண்டு இருந்தபோது, ஆர்வமிகுதியில் ஆர்ப்பரித்து சென்ற நீரில் ஸ்வப்னில் விழுந்து நீரில் கரையேறி வர முயற்சித்தார்.

ஆனால், கடவுளை வணங்கிவிட்டு நீருக்குள் குதித்தனர், நீரின் வேகத்தை எதிர்கொள்ள இயலாமல் நீருடன் இழுத்து செல்லப்பட்டார். அவரின் நண்பர்கள் தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்ததால் யாராலும் காப்பாற்ற முடியவில்லை. ஒருவர் கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும், அவரே வரம்பில் நின்றதால் எதுவும் செய்ய முடியவில்லை. 

நீருடன் அடித்து செல்லப்பட்ட ஸ்வப்னில் உடலை அதிகாரிகள் இரண்டு நாட்களாக தேடி வருகின்றனர். விசாரணையில் ஜிம் பார்ட்னர்களுடன் இன்பசுற்றுலா வந்த இடத்தில் ஆர்வமிகுதியால் ஸ்வப்னில் இறுதி முடிவை தேடிக்கொண்டது தெரியவந்தது. அவர் உயிர்பிழைத்திருக்க வாய்ப்புகள் குறைவு என விபரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: வேலை பார்த்தபடி நொடியில் பறிபோன உயிர்; வங்கி மேலாளருக்கு நடந்த சோகம்..! கேமிராவில் பதிவான காட்சிகள்.!