இந்தியா

20 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் பரிதாப பலி.!

Summary:

20 அடுக்குமாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 7 பேர் பரிதாப பலி.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பை, டார்டியோ பாட்டியா மருத்துவமனை அருகே கமலா அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் 20 மாடிகளை கொண்டது ஆகும். 

இந்நிலையில், இன்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் தீ விபத்து ஏற்படவே, உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு 13 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியை தொடங்க, மற்றொருபுறம் குடியிருப்பு வளாகத்தில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியும் நடைபெற்றன.

இந்நிலையில், இந்த தி விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


Advertisement