கதறிய அழுத அரசி புயலாக மாறிய தருணம்! கழுத்திற்கு வந்த கத்தி! பாண்டியன் ஸ்டோர்ஸ் புரோமொ வீடியோ.....
என் தொகுதி ரோடு, அந்த எம்.பி நடிகை கன்னம் போல இருக்கும் - அமைச்சர் சர்ச்சை பேச்சு..!

எனது சாலையின் தரம் நடிகை மற்றும் எம்.பி கன்னம் போல இருக்கும் என சர்ச்சையாக மகாராஷ்டிரா குடிநீர் விநியோகத்துறை அமைச்சர் பேசினார்.
மகாராஷ்டிரா மாநிலத்தின் குடிநீர் விநியோக துறை அமைச்சராக இருப்பவர் குலாபிராவ் பாடீல். இவர் சிவசேனா கட்சியை சார்ந்தவர். அங்குள்ள ஜலகாவ் புறநகர் தொகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டவர்.
இவர் தனது தொகுதியில் உள்ள சாலைகளை நடிகை மற்றும் பாஜக எம்.பி ஹேமமாலினியின் கன்னத்துடன் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறார். ஜலகாவ் மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அமைச்சர் அவ்வாறு பேசினார்.
அவர் பேசியதாவது, "அரசியலில் போட்டியாளர்கள் எனது தொகுதியின் சாலை தரத்தினை பார்க்க வேண்டும். இவர்களுக்கு ஹேமமாலியின் கன்னம் பிடிக்கவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்துவிடுகிறேன். ஹேமமாலியின் கன்னம் போல எனது சாலை தரமாக இருக்கும்" என்று பேசினார்.
இந்த விசயத்திற்கு மாநில மகளிர் ஆணைய தலைவர் ரூப்லி சகான்கர் கடுமையான கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். மேலும், அமைச்சர் மன்னிப்பு கேட்காத பட்சத்தில், அவரின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து இருக்கிறார்.